என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dandee union executives"

    • டாண்டீ தொழிலாளர்களின் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து கடிதம் வழங்கப்பட்டது.
    • தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்திலுள்ள டாண்டீ தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களான தொமுச, ஏஐடியுசி, ஐ.என்.டியு.சி, சி.ஐ.டி.யு ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் மாவட்ட கழக அலுவலகத்தில் சந்தித்து டாண்டீ தொழிலாளர்களின் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து, கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கினர். அப்போது, தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ெதரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தோட்ட தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க துணை பொது செயலாளர் மாடசாமி, நிர்வாகிகள் சந்திரன், அண்ணாதுரை, கிருஷ்ணமூர்த்தி, குமார், அன்பழகன், சி.ஐ.டி.யு சந்திரகுமார், ஐ.என்.டியு.சி யோகநாதன், ஏஐடியுசி பெரியசாமி, கூடலூர் தொகுதி ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் லியாகத் அலி, பாபு, சிவானந்தராஜா, சேகரன், சின்னவர், சுப்பிரமணி, உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    ×