என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dams level decreasing"

    • பருவமழையின்போது நிரம்பி காணப்பட்ட அணையின் நீர்மட்டம் தற்போது மழை இல்லாததால் சரிந்து வருகிறது.
    • முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 116.30 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 54.40 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    பருவமழையின்போது நிரம்பி காணப்பட்ட அணையின் நீர்மட்டம் தற்போது மழை இல்லாததால் சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 116.30 அடியாக உள்ளது. வரத்து அடியோடு நின்றுவிட்டது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 54.40 அடியாக உள்ளது. 49 கனஅடிநீர் வருகிறது. 72 கனஅடிநீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.40 அடியாக உள்ளது. 20 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 60.52 அடியாக உள்ளது. 5 கனஅடிநீர் வருகிறது. 3 கனடிநீர் திறக்கப்படுகிறது.

    ×