என் மலர்
நீங்கள் தேடியது "damaged the gate"
- பிரவிந்த் தோப்பு கேட், பூட்டு மற்றும் கரையை ஜே.சி.பி எந்திரம் மூலம் மணி சேதப்படுத்தினார்.
- அவரது தோட்டத்திற்கு செல்ல பாதையை மேலும் அகலப்படுத்தியதை தட்டிக்கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே காட்ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரவிந்த்(45). இவருக்கு மஞ்சளாறு அணை பகுதியில் மாந்தோப்பு உள்ளது. இதன் அருகே மணி என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது.
அவர் சென்றுவர தனது நிலத்தில் பாதை அமைக்க ஒப்புக்கொண்டார். இந்தநிலையில் பிரவிந்த் தோப்பு கேட், பூட்டு மற்றும் கரையை ஜே.சி.பி எந்திரம் மூலம் மணி சேதப்படுத்தினார். மேலும் அவரது தோட்டத்திற்கு செல்ல பாதையை மேலும் அகலப்படுத்தி உள்ளார். இதை தட்டிக்கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






