என் மலர்
நீங்கள் தேடியது "Damage to power generation"
- 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் கூடிய பழைய அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது.
- 3-வது யூனிட்டில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது
மேட்டூர்:
மேட்டூரில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் கூடிய பழைய அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இதில் 3-வது யூனிட்டில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது இதன் காரணமாக இந்த 3-வது யூனிட்டில் மின்உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டு பழுது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய மின் நிலையத்தில் தற்போது 630 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.






