என் மலர்
நீங்கள் தேடியது "dalit leader shoot dead"
பாட்னா:
பீகார் மாநிலம் முகாபர்பூர் நகரம் அருகில் உள்ள அபி சாப்ரா கிராமத்தில் தலித் பிரிவைச் சேர்ந்த வாலிபருக்கும் இன்னொரு பிரிவைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
அப்போது திடீரென்று அவர்களுக்கு இடையே கலப்பு திருமணம் தொடர்பாக மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் துப்பாக்கியால் சுட்டதில் நவின் மாஞ்சி என்ற 22 வயது வாலிபர் குண்டு பாய்ந்து பலியானார். தலித் பிரிவைச் சேர்ந்த இவர் தான் திருமண ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார். இது தொடர்பாக மணமகனின் மைத்துனர் முகேஷ்குமார் என்பவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
அவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் மூண்டது. கார், வேன்கள், இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சிலர் மணமகளை தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளையும் திருமண கோஷ்டியினர் அணிந்திருந்த நகைகளையும், செல்போன்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதையடுத்து அந்த கிராமத்துக்கு கூடுதல் போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Dalitleaderdead #tamilnews






