search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cycle mode"

    • பள்ளிகள் தூரமாக இருப்பதும், சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு முக்கிய காரணம்.
    • வருகிற 15-ந்தேதி காலை உணவு காலை 8.15 மணியில் இருந்து வழங்கப்படும்.

    சேலம்:

    அரசு தொடக்கப்பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகின்றனர். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை. பள்ளிகள் தூரமாக இருப்பதும், சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு முக்கிய காரணம்.இதை கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

    அதன்படி முதல்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சி, தொலைதூர கிராமங்கள், மலைக்கிராமங்களில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வருகிறது.அந்த வகையில் சேலம் மாநகராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வருகின்ற 15-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது.இதற்கான நடவடிக்கை களை சேலம் மாவட்ட நிர்வாகமும், சேலம் மாநகராட்சியும் எடுத்து வருகிறது. அரசு ெதாடக்கப்பள்ளியில் மொத்தம் எத்தனை குழந்தைகள் படிக்கி றார்கள்? என்பது குறித்த கணக்கெடுப்பு முடிந்து பட்டியல் தயாரிப்பு பணி நிறைவடைந்துள்ளது. தற்போது சமையலுக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    வருகிற 15-ந்தேதி காலை உணவு காலை 8.15 மணியில் இருந்து வழங்கப்படும். முன்னதாக சத்துணவு அமைப்பாளர் தலைமையில் சத்துணவு ஊழியர், சமையலர் உணவு சமைத்து, உணவை பரிசோதித்த பிறகு பள்ளி குழந்தைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளளர்.திங்கள், வியாழக்கிழ மைகளில் ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா என ஏதேனும் ஒரு உப்புமா வகையுடன் காய்கறி சாம்பார், செவ்வாய், வெள்ளிக்கிழமை ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி என ஏதேனும் ஒரு கிச்சடி வகை வழங்கப்படும். வெள்ளிக்கிழமை மட்டும் ரவா கேசரி, சேமியா கேசரி, கூடுதலாக இனிப்பு உண்டு. புதன் கிழமையன்று ரவா பொங்கல், வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பார் வழங்கப்படும்

    ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழங்கும் காலை உணவின் மூலப்பொருட்கள் அரிசி, கோதுமை ரவா, சேமியா 50 கிராம் இருக்க வேண்டும். வாரத்தில் இரு நாட்கள் உள்ளூர் காய்கறிகள், சிறுதானியங்கள் இடம்பெற வேண்டும். உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் தரமானதாக இயல்பான நிறம், மணம் உடையதாக கலப்படமற்றதாக இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்த கூடாது. பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களை சுழற்சி முறையில் இப்பணிகளை மேற்பார்வையிட வேண்டும். சுத்தமான சமையல் பாத்திரங்களை பயன்படுத்துதல், காய்கறிகள், உணவுகள் சுகாதாரமான முறையில் பயன்படுத்துதல், சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×