search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cultivation of mung beans"

    • பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஆர்வம் காட்டி வந்தனர்.
    • சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காயை அதிக அளவு பயன் படுத்துகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை மற்றும் மடத்துக்குளம் ,குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் தக்காளி ,மிளகாய், வெண்டை ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது.குடிமங்கலம் பகுதியில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.நிறைந்த வருமானம் ,சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சல், மதிப்புக் கூட்டுப்பொருளாக மாற்றுவது போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஆர்வம் காட்டி வந்தனர்.

    ஆனால் தென்னை சாகுபடி ஆண்டு பயிர் என்பதால் வறட்சியான காலங்களில் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் கிணற்று நீரை பயன்படுத்தி குறைந்த கால பயிர்களை சாகுபடி செய்யும் நிலைக்கு மாறியுள்ளனர்.

    எப்பவும் குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் தக்காளி ,மிளகாய் , வெண்டை ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி, மிளகாய், பூண்டு சந்தையில் அதிக அளவு விற்பனை ஆகும் பயிராக வெண்டைக்காய் உள்ளது.மேலும் சமையலுக்கு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சாம்பார், பொரியல், புளிக்குழம்பு உள்ளிட்ட அசைவ உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இவற்றின் தேவை அதிகமாக உள்ளது.

    சமீப காலமாக சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காயை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். எனவே விவசாயிகள் தற்போது வெண்டைக்காயை தனிப்பயிராக பயிரிட்டு விற்பனையில் அதிக வருமானம் பெற்று வருகின்றனர்.

    ×