search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crop Chart"

    • மதுரை கோட்டத்தில் ‘கிராப் சார்ட்’ மூலம் ரெயில் இயக்கம் கண்காணிப்பு செய்யப்படுகிறது.
    • தொலைபேசியில் மாலை 4 மணிக்கு அனைத்து ெரயில் நிலையத்திற்கும் பொதுவான அலாரம் வரும். அப்போது அவர்கள் கடிகாரத்தில் 4 மணி என சரிசெய்து கொள்வர்.

    மதுரை

    காவல்துறைக்கு கட்டுப்பாட்டு அறை போல, ரெயில்கள் இயக்கத்திற்கும் கட்டுப்பாட்டு அறை உண்டு. இது மதுரை கோட்ட அலுவலகத்தில் செயல்படுகிறது. இங்கு தலைமை அதிகாரி ஒருவர் ரெயில்கள் இயக்குவதற்கான ஆலோசனை மற்றும் உத்தரவுகளை வழங்குகிறார்.

    மதுரை கோட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் போராட்டம் காரணமாக ரயில்கள் இயக்கம் தடைபடும் போது, அதற்காக மாற்று நடவடிக்கைகளை இந்த துறை உடனடியாக செயல்படுத்தும். இதற்காக அங்கு "கிராப் சார்ட்" போல ஒரு பக்கம் நேரம், மறுபக்கம் ரெயில் நிலைய பெயர்கள் எழுதி, கோடுகள் வரைந்து ரெயில் இயக்கம் நிர்ணயிக்கப்படுகிறது.

    இதற்காக ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் டயல் செய்ய வசதி இல்லாத கண்ட்ரோல் போன் உண்டு. அதில் அதிகாரி நிலைய பெயரை சொன்னால், மதுரை கட்டுப்பாட்டு அலுவலர் உடனடியாக பேசுவார். இந்த தொலைபேசியில் மாலை 4 மணிக்கு அனைத்து ரெயில் நிலையத்திற்கும் பொதுவான அலாரம் வரும். அப்போது அவர்கள் கடிகாரத்தில் 4 மணி என சரிசெய்து கொள்வர்.

    தேஜாஸ் போன்ற முக்கிய ரெயில்களுக்கு பிங்க் கலர், பயணிகள் ரெயில்களுக்கு சிவப்பு கலர், சரக்கு ரெயில்களுக்கு பச்சை கலர், தனியாக செல்லும் என்ஜினுக்கு கருப்பு கலர் கோடுகள் வரைந்து, ரெயில் போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது. அப்போது ஒற்றை ரெயில் பாதையில் கோடுகள் சந்திக்கும் இடங்களில், ஏதாவது ஒருரெயிலை நிறுத்தி வழி விடுவார்கள். தற்போது இந்த முறை கணினிமயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த முறையில் பதியப்படும் ரெயில் வருகை மற்றும் புறப்பாடு நேரம் ஆகியவை பயணிகளுக்கு பல்வேறு செயலிகள் மூலம் உறுதியான தகவலாக வழங்கப்படுகிறது.

    சென்னை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ரெயில்வே கோட்டங்களிலும் கட்டுப்பாட்டுத்துறை இயங்குகிறது. அவற்றைக் கண்காணிக்க சென்னை ரெயில்வே தலைமையகத்தில் தலைமை கட்டுப்பாட்டு துறை உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    ×