என் மலர்
நீங்கள் தேடியது "Court action verdict"
- கடந்த 3.2.2018 அன்று திருச்செங்கோட்டில் இருந்து ஈரோட்டுக்கு அரசு பஸ்சில் சென்றார்.
- டிக்கெட் கட்டணமான ரூ.7-க்கு பதிலாக கண்டக்டர் ரூ.8 வாங்கினார். இது குறித்து பாலசுப்பிரமணியம் கேட்டபோது, அவர் முறையாக பதில் அளிக்க வில்லை.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி யம். இவர் கடந்த 3.2.2018 அன்று திருச்செங்கோட்டில் இருந்து ஈரோட்டுக்கு அரசு பஸ்சில் சென்றார் .அப்போது டிக்கெட் கட்டணமான ரூ.7-க்கு பதிலாக கண்டக்டர் ரூ.8 வாங்கினார். இது குறித்து பாலசுப்பிரமணியம் கேட்டபோது, அவர் முறையாக பதில் அளிக்க வில்லை. அதிகாரியிடம் பாலசுப்பிரமணியன் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
நீதிமன்றத்தில் வழக்கு
இதனால் நாமக்கல் பயணீட்டாளர் சங்கத்தின் மூலம் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் தமிழக அரசு போக்குவரத்து கழக துணை மேலாளரும், கண்டக்டரும் சேர்ந்து திருச்செங்கோடு, ஈரோடு இடையே சரியான தூரத்தை நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் கட்டணங்களையும் நிர்ணயம் செய்து வசூல் செய்ய வேண்டும்.
அந்த அறிக்கையை 2 மா தங்களுக்குள் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் நிலையில் இருவரும் ரூ. 10 லட்சம் அபராதத்தை தமிழ்நாடு நுகர்வோர் நலநிதிக்கு செலுத்த வேண்டும்.
ரூ.30 ஆயிரம் அபராதம்
அதோடு கண்டக்டர், துணை மேலாளர் ஆகி யோர் இணைந்து ரூ.30 ஆயிரம் அபராதமும், முறையீ ட்டாளரிடம் கூடுதலாக வசூலித்த ஒரு ரூபாயையும் திரும்ப செலுத்த வேண்டும்.
நேர்மையற்ற அணுகு முறையை கடைபிடித்ததற்கும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கும் இழப்பீடாக முறையீட்டாளருக்கு ரூ.25 ஆயிரம், வழக்குச் செலவாகும் ரூ.5 ஆயிரம் என ரூ.30 ஆயிரத்தை அடுத்த மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.






