என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cotton Yarn Price"

    • தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இந்த தொழில் கடந்த 8 ஆண்டாக பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
    • இதற்கிடையே 2021-ம் ஆண்டு நவம்பர் முதல் பருத்தி நூல் விலை 100% உயர்ந்து உள்ளது.

    நாமக்கல்:

    சேலம், நாமக்கல், கரூர், கோவை, ஈரோடு, திருப்பூர், விருதுநகர் உள்பட தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது.

    இந்த தொழில் கடந்த 8 ஆண்டாக பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. பருத்தி நூலை பயன்படுத்தி விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் வேட்டி, சேலை, துண்டு, பெட்ஷீட், சாமி வேட்டி உள்ளிட்ட ஜவுளிகள் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன. இதனால் அரசுக்கு அந்நிய செலவாணியும், மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்து வந்தன.

    இதற்கிடையே 2021-ம் ஆண்டு நவம்பர் முதல் பருத்தி நூல் விலை 100% உயர்ந்து உள்ளது. நூல் விலை உயரும் போதும், குறையும் போதும் பாதிக்கப்படுவது நெசவாளர்கள் தான். அவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு விசைத்தறி ஜவுளிக்கு விதிக்கப்பட்டு உள்ள ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும். பருத்தி நூல் விலையை அடிக்கடி ஏற்றம், இறக்கம் செய்யாமல், 6 மாதம் வரை ஒரே சீராக இருக்கும் வகையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

    விசைத்தறி சார்ந்த துறைகளுக்கு மின் கட்டணம் உயர்வை மாநில அரசு திரும்ப பெற வேண்டும். விசைத்தறி தொழிலுக்கு தனி அமைச்சர் நியமனம் செய்ய வேண்டும்.

    தொழிலை நம்பி உள்ள ஒரு கோடி மக்களின் வாழ்வாதாரத்தை காக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்க முன்னாள் பொருளாளர் சிங்காரம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

    ×