search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cotton supply is low"

    • இறக்குமதி, துவக்க இருப்பு உட்பட 399 லட்சம் பேல் பஞ்சு கிடைக்குமென கணக்கிடப்பட்டது.
    • கடந்த மாதம் 29.54 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்திருந்தது.

    திருப்பூர்:

    இந்திய பருத்தி கழகம் சார்பில் நடப்பு ஆண்டுக்கான பருத்தி தேவை பூர்த்தியடையும் என கணக்கிடப்பட்டது. நடப்பு ஆண்டில் பருத்தி விளைச்சல் மட்டும் 315 லட்சம் பேல் அளவுக்கு இருக்கும். இறக்குமதி, துவக்க இருப்பு உட்பட 399 லட்சம் பேல் பஞ்சு கிடைக்குமென கணக்கிடப்பட்டது.உள்நாட்டு நூற்பாலைகள் தேவைக்கு மட்டும் 283 லட்சம் பேல் பஞ்சு தேவையெனவும் தெரிவிக்கப்பட்டது. பருத்தி சீசன் துவங்கி 7 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பருத்தி வரத்து மீண்டும் கடந்த சில வாரங்களாக குறைய துவங்கியுள்ளது.

    அக்டோபர் மாதம் - 9.71 லட்சம் பேல், நவம்பர் மாதம் 27.03 லட்சம், டிசம்பர் -27.96 லட்சம், ஜனவரி 26.66 லட்சம், பிப்ரவரி - 33.77 லட்சம், மார்ச் - 30.07 லட்சம் பேல் என பஞ்சு விற்பனைக்கு வந்திருந்தது. கடந்த மாதம் 29.54 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்திருந்தது.கடந்த அக்டோபர் மாதம் துவங்கி ஏப்ரல் இறுதி வரை 184.77 லட்சம் பேல் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம், பஞ்சு வரத்து அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டில் பஞ்சு விலை வானம் தொடும் அளவுக்கு உயர்ந்ததால் இந்தாண்டும் கூடுதல் லாபம் கிடைக்குமென விவசாயிகள் காத்திருந்தனர்.விலையில் மாற்றம் இருக்காது என்பது உறுதியான பின்னரே மார்ச் மாதத்துக்கு பின் வரத்து துவங்கியது.குறிப்பாக பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர் வரத்தில், வரலாறு காணாத அளவுக்கு குழப்பம் நீடிக்கிறது.பல இறக்குமதி நாடுகளில் சிக்கன நடவடிக்கை காரணமாக பழைய ஆடைகள் முழுமையாக காலியாகவில்லை. புதிய ஆர்டர் விசாரணை பரபரப்பாக நடந்தாலும் ஆர்டர் உறுதி செய்வதில் முழுமையான வெற்றி இல்லை.இத்தகைய காரணங்களால் நூற்பாலைகளுக்கான ஏற்றுமதி ஆடை தயாரிப்பு ஆர்டர் 80 சதவீதம் குறைந்துள்ளது.

    இதுகுறித்து நூற்பாலை நிர்வாகிகள் கூறியதாவது:-

    உள்நாட்டு ஆடை உற்பத்திக்கான நூலிழை உற்பத்தி மட்டும் வழக்கம் போல் நடக்கிறது. ஏற்றுமதி ஆடை தயாரிப்புக்கான நூல் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மார்க்கெட்டு வர்த்தகம் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.கடந்த மாத நிலவரப்படி குஜராத் மற்றும் மகாராஷ்டிரா பருத்தி மார்க்கெட்டுகள் மட்டும் பரபரப்பாக இயங்கியது. இரு மாநிலங்களில் இருந்து மட்டும் 19 லட்சத்துக்கும் அதிகமான பஞ்சு பேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்தநிலையில் திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும், டாப் -10 வரிசையில் குழந்தைகளுக்கான கம்பளி பின்னலாடைகள் இடம்பெற்றுள்ளன.உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் சர்வதேச ஜவுளி சந்தைகளில் இந்தியாவுக்கு 6 சதவீத பங்களிப்பு உள்ளது. அவற்றில் ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை ஏற்றுமதி செய்யும் திருப்பூர் முக்கிய இடத்தை பெற்று விளங்குகிறது.

    பின்னலாடைகள் பருத்தி நூலிழையில் தயாரிக்கும் ஆயத்த ஆடைகளுக்கு வரவேற்பு அதிகம். குறிப்பாக திருப்பூரில் உற்பத்தியாகும் ஆண்கள் அணியும் டி-சர்ட் மற்றும் குழந்தைகளுக்கான காட்டன் ஆடைகள் அதிக அளவில் வெளிநாட்டினரால் விரும்பப்படுகிறது.

    சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள பிப்ரவரி மாத வர்த்தக புள்ளி விவரங்களில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி விவரம் இடம்பெற்றுள்ளது. திருப்பூரில் இருந்து பிப்ரவரி மாதம் வரை 33 ஆயிரத்து 764 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது.

    திருப்பூரில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் டாப் 10 பொருட்கள் 20 ஆயிரத்து 322 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகியுள்ளன. இது மொத்த ஏற்றுமதியில் 60.19 சதவீதம். அவற்றில் பின்னலாடைகள் பங்களிப்பு மட்டும் 98 சதவீதம்.திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும் பின்னலாடையில் பருத்தி நூலிழை டி-சர்ட் மட்டும் 7,709 கோடி ரூபாய்க்கு (23 சதவீதம்) இடம்பெற்றுள்ளது. அடுத்ததாக பருத்தி நூலிழையில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான ஆடைகள் 3,560 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகியுள்ளது.

    இதேபோல் செயற்கை நூலிழையில் தயாரித்த டி-சர்ட் , பருத்தி நூலிழையில் தயாரிக்கப்பட்ட பைஜாமா மற்றும் இரவு ஆடைகள், பின்னலாடை சட்டைகள், ஷார்ட்ஸ் மற்றும் டிராயர்கள் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளன. திருப்பூரில் தயாரான கம்பளி மற்றும் செம்மறி ஆடு ரோமத்தில் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டிய ஆடைகள் இடம்பெற்றுள்ளன.

    இத்தகைய குழந்தைகள் ஆடைகள் 2022 ஏப்ரல் மாதம் துவங்கி 2023 பிப்ரவரி மாதம் வரை 770 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகியுள்ளது. இது டாப் 10 ஏற்றுமதியில் 3 சதவீதத்துக்கு குறைவாக இருந்தாலும், வருங்காலத்தில் மதிப்பு கூட்டப்பட்ட ஆடை வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகளை வாரி வழங்குமென ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.பருத்தி நூலிழையில் தயாரிக்கும் ஆயத்த ஆடைகளுக்கு வரவேற்பு அதிகம். குறிப்பாக திருப்பூரில் உற்பத்தியாகும் ஆண்கள் அணியும் டி-சர்ட் மற்றும் குழந்தைகளுக்கான காட்டன் ஆடைகள் அதிகளவில் வெளிநாட்டினரால் விரும்பப்படுகிறது.

    ×