search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corporate entities"

    • கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • தூய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமிக்க கோரிக்கை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியின் நகர மன்ற அவசரக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமை தாங்கினார்.

    நகராட்சி துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி. சிசில்தாமஸ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் பேசும்போது குடியாத்தம் நகராட்சியில் 4 நாட்கள் முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை காவேரி கூட்டுக் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    குடியாத்தம் நகராட்சியில் அனைத்து பகுதிக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் ர் வழங்கும் வகையில் கடந்த இரண்டு மாதங்களாக நகராட்சி அதிகாரிகள் கடுமையாக பணி செய்து குடிநீர் வழங்க திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளனர்.

    அதனால் மத்திய மாநில அரசுகள் நிதி உதவியுடன் அம்ருத் திட்டத்தின் கீழ் 12 கோடியே 92 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பசுமத்தூரில் இருந்து குடியாத்தம் நகருக்கு கூடுதலாக குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதற்காக பல இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படும் செதுக்கரை பயணியர் விடுதி அருகே தரைத்தள ராட்சத குடிநீர் தொட்டி கட்டப்படும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் இதற்காக கடுமையாக பாடுபட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நகராட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் நுகர்பொருள் விநியோகிஸ்தர்கள் சிலரை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது அதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் குடியாத்தம் பகுதியில் வணிகம் மேற்கொள்ள தடை விதிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்ள வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

    குடியாத்தம் நகராட்சி பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ள போதுமான பணியாளர்கள் இல்லை கூடுதலாக பணியாளர்கள் நியமிக்க வேண்டும் பலமுறை கூட்டத்தில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உறுப்பினர்கள் பேசினார்கள் தொடர்ந்து மழை காலம் வருவதால் அனைத்து கால்வாய்களில் தூர்வார வேண்டும், கழிவு நீர் மற்றும் மழை நீர் சீராக செல்ல செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஆட்டோ மோகன் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், நவீன்சங்கர், ஜாவித்அகமது, நளினி, லாவண்யா உள்பட உறுப்பினர்கள் பலர் பேசினார்கள்.

    ×