என் மலர்

  நீங்கள் தேடியது "Coordinator Meeting"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஒன்றிணைந்து வாக்குச்சாவடி குழுவில் எந்த வேறுபாடும் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது
  • கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் தலைமை தாங்கினார்.

  திருப்பூர் :

  தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி குழு அமைப்பதற்கான ஒன்றியம் வாரியாக வாக்குச்சாவடி குழு ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நேற்று திருப்பூரில் உள்ள மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

  கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் தலைமை தாங்கினார். வாக்குச்சாவடி குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன செல்வம், மாவட்ட அலுவலக வக்கீல் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர வாக்குச்சாவடி குழு அமைப்பதற்காக ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வாக்குச்சாவடி குழுவில் இடம் பெற்றவர்களுக்கு அறிவுரைகளும், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும், கடமைகளும் விளக்கிக் கூறப்பட்டது.

  ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஒன்றிணைந்து வாக்குச்சாவடி குழுவில் எந்த வேறுபாடும் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது

  ×