search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coocnut"

    • ரேஷன் கடைகளில் பாமாயிலை தடை செய்துவிட்டு தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும்
    • பச்சை தேங்காய் கிலோ ரூ.50 க்கு கொள்முதல் செய்ய வேண்டும்

    பல்லடம்:

    பல்லடம் அருகே தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு துரைசாமி தலைமை தாங்கினார். ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி , பொங்கலூர் ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஆர்.பி.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநிலத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், மாநகர் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், பல்லடம் ஒன்றிய தலைவர் வேலுமணி, பல்லடம் நகர தலைவர் மைனர் தங்கவேல், பொங்கலூர் ஒன்றிய துணைத் தலைவர் சண்முகம், காங்கேயம் ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ராசுமணி, உத்தமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தின்போது பிரதான கோரிக்கையான தேங்காய்க்கு விலை வேண்டும், கொப்பரை தேங்காய் ஒன்றுக்கு ரூ.140 வழங்க வேண்டும், 35 ஆண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிற கள்ளுக்கான தடையை நீக்கி அனுமதி தர வேண்டும், பச்சை தேங்காய் கிலோ ரூ.50 க்கு கொள்முதல் செய்ய வேண்டும்,ரேஷன் கடைகளில் பாமாயிலை தடை செய்துவிட்டு தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சத்துணவு கூடத்திலும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது. உடனடியாக அரசு பரிசிலித்து இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இந்த தொடர் போராட்டம் நடைபெறும். தொடர் போராட்டத்திற்கு பின்பு சென்னை சென்று தலைமைச் செயலகத்தின் முன்பு பெருந்திரளான விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடைபெறும். அங்கேயும் தேங்காய் உடைத்து அரசு கவனத்தை ஈர்க்கின்ற வகையில் இந்த போராட்டம் அமையும் என தெரிவித்தனர். போராட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் வாவிபாளையம் சுரேஷ்குமார் செய்திருந்தார்.

    ×