search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Conveyance"

    • காலகம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • மீன் பண்ணை உரிமையாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.

    பேராவூரணி:

    பேராவூரணி பகுதிகளில், ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு கடத்தப்படுவதாக காவல்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் இது குறித்து நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு தடுப்பு பிரிவுக்கு உத்தர விட்டார்.

    அதன் பேரில், உதவி ஆய்வாளர் விஜய் தலைமை யில், தலைமைக் காவலர்கள் செல்வராஜ், மணிகண்டன் மற்றும் காவல்துறையினர், பேராவூரணி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, பேராவூரணியை அடுத்த காலகம் பகுதி யில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழி யாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சரக்கு ஆட்டோவில் சிறிய, சிறிய சாக்கு மூட்டைகளில் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சரக்கு ஆட்டோவில் வந்த அதன் உரிமையாளர் பேராவூரணியை அடுத்த செருபாலக்காடு ராமச்சந்திரன் (52) மற்றும் சரக்கு ஆட்டோ வை ஓட்டி வந்த காலகம் கந்தகுமார் (50) ஆகிய 2 பேரை கைது செய்தனர். ரேசன் அரிசி அந்தப் பகுதியில் உள்ள மீனவக் கிராம மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்து, அதனை மீன் பண்ணை உரிமையாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி வந்தது தெரிய வந்தது.இதையடுத்து சரக்கு ஆட்டோவையும் அதில் வந்த ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×