என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Continuity of alcohol"

    • சின்னமனூர் பகுதியில் பகல் நேரத்திலேயே போதையில் சுற்றித்திரியும் குடிமகன்கள் ரகளையில் ஈடுபடுவதால் பயணிகள், பெண்கள் உள்ளிட்டோர் அச்சம் அடைந்து வருகின்றனர்.
    • காலை மற்றும் மாலை நேரங்களில் குடிபோதையில் சுற்றித்திரியும் நபர்களால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

    சின்னமனூர்:

    தமிழகத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் பகல் நேரத்திலேயே போதையில் சுற்றித்திரியும் குடிமகன்கள் ரகளையில் ஈடுபடுவதால் பயணிகள், பெண்கள் உள்ளிட்டோர் அச்சம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் தங்கள் மனைவி குழந்தைகளை பற்றி யோசிக்காமல் மிதமிஞ்சிய போதையில் பல்வேறு பகுதியில் மயங்கி விழுகின்றனர்.

    சில நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையோரம் மயங்கி கிடக்கும் நபர்கள் விபத்தில் சிக்கும்அபாயம் உள்ளது.

    குடி போதையில் இருப்பதால் பொதுமக்கள் அவர்களை கண்டு கொள்ளாமல் செல்கின்ற னர். உதவிக்கு சென்றால் அவர்களுடன் தகராறில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக தேரடி பஸ் நிறுத்தம் பகுதியில் அதிக அளவில் பள்ளி குழந்தைகள் சென்று வருகின்றனர்.

    அங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் குடிபோதையில் சுற்றித்திரியும் நபர்களால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×