search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Continuity of accidents"

    • சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பஸ் சாலை யை விட்டு கீழே இறங்கி பள்ளத்தில் சிக்கியது.
    • வந்தபின் பார்ப்போம் அல்லது வந்தால் பார்ப்போம் என்பது சமீபகால ஆட்சியா ளர்களின் செயல்பாடாக உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பட்டா ம்பாக்கத்தில் எதிரெதிரே வந்த பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இது வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராள மானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நாளில் நெல்லிக்குப்பத்தில் டிராக்டர் மீது தனியார் பஸ் மோதி விபத்துக்கு ள்ளானது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பஸ் சாலை யை விட்டு கீழே இறங்கி பள்ளத்தில் சிக்கியது. இந்நிலையில் நேற்று நெல்லிக்குப்பத்தில் இருந்து வந்த தனியார் பஸ்சின் கியர் ராடு உடைந்து பஸ் தாறுமாறாக ஓடியது. நேருக்கு நேர் பஸ்கள் மோதிய விபத்தை தவிர்த்து மற்றவைகளில் உயிரிழப்பு ஏதும் இல்லை.

    இந்த பஸ்கள் விபத்துக்கு ள்ளானதற்கு பஸ்சில் பணி செய்பவர்களை மட்டும் குறை கூறுவது சரியல்ல. பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தபடும் பஸ், லாரி போன்ற வாகனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை எப்.சி. எடுக்கப்படுகிறது. அதாவது, இந்த வாகனங்கள் பொது மக்களை ஏற்றிச் செல்வதற்கு உகந்தது என போக்குவரத்து அதிகாரிகள் சான்று அளிக்கின்றனர். அதன் பின்னரே இந்த வாகனங்கள் இயக்கப்படுகிறது. ஆனாலும், தனியார் பஸ்களில் திடீரென டயர் வெடிக்கிறது. கியர் ராடு உடைகிறது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழக்கிறது. இதில் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.

    ஹெவி லைசன்ஸ் இல்லாதவர்கள் பஸ் போன்ற கனரக வாகனங்களை இயக்குவது, செலவினங்களை குறைக்க தரமற்ற அல்லது பழைய பொருட்கள் விற்கும் கடைகளில் வாங்கப்பட்ட உதிரி பாகங்களை பஸ்சுக்கு பயன்படுத்துவது, ஒரிஜினல் டயரை வாங்காமல், பழைய டயர்களை வாங்கி ரீ டிரேட் செய்து பஸ்களுக்கு பொறுத்துவது போன்றவைகளே இது போன்ற விபத்துக்களுக்கு காரணமாகும். இதனை கண்காணிக்கும் பொறுப்பு போக்குவரத்து துறைக்கு உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மையாகும். சமீபத்தில் கடலூர் போக்குவரத்து துறையில் நடைபெற்ற கூட்டத்தில், கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி பேசிய வீடியோ சமூக வலைத ளங்களில் வைரலாக பரவியது. பொதுமக்கள் எளிதில் அணுகமுடியாத துறையாக போக்குவரத்து துறை உள்ளது. புரோக்க ர்கள் இல்லாமல் இங்கு எந்த பணியும் நடப்பதில்லை.

    லஞ்சம் வாங்குவதற்கு பதிலாக பிச்சை எடுத்து வாழலாம் என்றும், கடலூர் மாவட்டத்தில் லஞ்ச ஓழிப்பு துறைக்கு வரும் புகார்களில் அதிகளவில் போக்குவரத்து துறையை பற்றிதான் புகார்கள் வருகின்றன என்று பேசினார். இந்நிலையில்தான் கடலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் தொடர் விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதனை கண்காணிக்கும் பொறுப்பி லிருந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ஏன் விலகுகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வரும் முன் காப்போம் என்பது ஆன்றோர் சொல். வந்தபின் பார்ப்போம் அல்லது வந்தால் பார்ப்போம் என்பது சமீபகால ஆட்சியா ளர்களின் செயல்பாடாக உள்ளது. ஒரு சம்பவம் நடந்த பிறகு அதைச் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அந்தவகையில் கூட தனியார் பஸ்களின் தொடர் விபத்து தொடர்பாக எந்த நடவடிக்கையையும், மாவட்ட நிர்வாகமும், போ க்குவரத்து துறையினரும் எடுக்க வில்லை என்பதே நிதர்ச னமான உண்மையாகும்.

    ×