search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "consulted"

    அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று காணொலி காட்சி வாயிலாக, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.



    வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை தலைமை தேர்தல் ஆணையர் வழங்கினார். 
    ×