search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Construction of houses"

    • வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
    • பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் செலுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    மத்திய, மாநில அரசுகளின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மானியத்தில் பட்டா நிலத்தில் வீடு கட்ட விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    மேலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திருப்பூர் கோட்டம் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் நகர்ப்புற வீடற்ற ஏழைகள் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மொத்தம் 4 ஆயிரத்து 220 வீடுகள் ரூ.334 கோடியே 68 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2 ஆயிரத்து 408 வீடுகளின் கட்டுமான பணிகள் ரூ.220 கோடியே 97 லட்சத்தில் கட்டப்பட்டு வருகிறது.

    திருப்பூரை அடுத்த பெருந்தொழுவு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை கலெகடர் வினீத் ஆய்வு செய்தார். இந்த பகுதியில் 192 வீடுகள் ரூ.19 கோடியே 10 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரு–கிறது. வருகிற நவம்பர் மாதம் இறுதிக்குள் பணிகள் முடிந்து வீடற்ற ஏழைகளுக்கும், திருப்பூர் மாநகராட்சியில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது.

    ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி பரப்பளவில் ஒரு சமையல் அறை, ஒரு படுக்கை அறை, வரவேற்பு அறை மற்றும் குளியலறை, கழிப்பிடம் ஆகியவற்றுடன் அமைக்கப்படும். ஒரு வீட்டின் மதிப்பு ரூ.9 லட்சத்து 94 ஆயிரம் ஆகும். இதற்கு பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் செலுத்த வேண்டும்.

    நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கலெக்டர் வினீத், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதவி பொறியாளர் சர்மிளாதேவி, தெற்கு தாசில்தார் கோவிந்தராஜன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

    ×