search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress candidate list declaration"

    மிசோரம் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது. #Mizoramassemblyelection #congress

    கவுகாத்தி:

    மிசோரம் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 40 தொகுதிகளை கொண்ட அம்மாநில சட்டசபைக்கு ஒரேகட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது.

    மிசோரமில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக தேர்தல் பணிகளை முன்னதாகவே காங்கிரஸ் தொடங்கி விட்டது.

    வேட்பாளர்கள் தேர்வில் எந்தவித குழப்பமும் வந்து விடக்கூடாது என்பதற்காக வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 36 தொகுதிகளுக்கு காங்கிரஸ் நேற்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    அந்த 36 வேட்பாளர்களில் 12 வேட்பாளர்கள் தேர்தல் களத்துக்கு முதன் முதலாக வரும் புதுமுக வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதுமுகங்களில் சுமார் 40 சதவீதம் பேர் இளைஞர்கள் ஆவார்கள்.

    மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    ஓரிரு நாட்களில் அந்த 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

    மிசோரமில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களில் 8 பேருக்கு காங்கிரஸ் மேலிடம் மீண்டும் போட்டியிட சீட் கொடுக்க வில்லை. அவர்களில் அமைச்சர் ரோமலியா, துணை சபாநாயகர் லல்ரின்மாலியா ஆகியோர் முக்கியமானவர்கள். #Mizoramassemblyelection #congress

    ×