search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Confiscation of sheep"

    • வனத்துறையினர் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்
    • தடுப்புகளை உடைத்து கார் வேகமாக சென்றது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகம் பரதராமி அடுத்த கொட்டாளம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி உள்ளது.

    ஆந்திராவில் இருந்து கொட்டாளம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வருகிறது அதனால் கொட்டாளம் வனத்துறை சோதனை சாவடியில் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றது.

    நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் ஆந்திராவில் இருந்து கொட்டாளம் சோதனை சாவடி வழியாக தமிழக பகுதிக்குள் கார் ஒன்று வந்தது அதனை வனத்துறையினர் தடுத்து நிறுத்த முயற்சித்துப் போது தடுப்புகளை உடைத்துக்கொண்டு பனமடங்கி பள்ளத்தூர் சாலையில் கார் வேகமாக சென்றது.

    தொடர்ந்து வனத்துறையினர் அந்த காரை விரட்டிச் சென்றனர். அப்போது வேகமாக சென்ற கார் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது மின் கம்பம் வளைந்து சேதமானது மின் கம்பிகள் தரையில் தொங்கின காரில் இருந்தவர்கள் தப்பி ஓடி உள்ளனர்.

    இதனை தொடர்ந்து வனத்துறையினர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த மின்கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்தினார்.

    இதனை தொடர்ந்து அந்த காரை மீட்டு வனத்துறையினர் சோதனை செய்தபோது அதில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள உயர்ரக 140 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து வனத்துறையினரின் கார் மற்றும் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து குடியாத்தம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

    தொடர்ந்து வனத்துறையினர் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து காரின் உரிமையாளர் குறித்தும் செம்மரக்கட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×