என் மலர்
நீங்கள் தேடியது "Computer repair"
- கம்ப்யூட்டர்கள் திடீர் பழுதானது
- கைகளால் ரசீது எழுதி கொடுக்கப்பட்டது
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதில் வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் இன்று மனு அளித்தனர்.
கலெக்டர் அலுவலக வாசலில் போலீசார் பலத்த சோதனைக்கு பிறகு பொதுமக்களை உள்ளே அனுமதித்தனர். வழக்கத்தை விட குறைதீர்வு கூட்டத்தில் இன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் மனு பதிவு செய்யக்கூடிய இடத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அங்குள்ள சில கம்ப்யூட்டர்கள் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் மனு அளித்த பொது மக்களுக்கு அதற்கான ரசீது கைகளால் எழுதி தரப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் மனு பதிவு செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இது குறித்து அங்கிருந்த ஊழியர் கூறுகையில்:-
வழக்கத்தைவிட இன்று பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொடுத்தால் அதிக நேரம் அவர்கள் நிற்க வேண்டி இருக்கும். எனவே கைகளால் ரசீது எழுதி கொடுக்கப்பட்டது என்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்களை தடுக்க நுழைவாயிலில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். ஆனால் தற்போது கலெக்டர் அலுவலகத்தில் சர்வீஸ் சாலைக்கு அருகிலும் ஒரு நுழைவாயில் திறக்க ப்பட்டுள்ளது. அந்த இடத்தில் எந்தவித சோதனை யும் நடைபெறவில்லை பொது மக்கள் சர்வசாதாரணமாக அந்த வழியாக வந்து சென்றனர்.






