என் மலர்
நீங்கள் தேடியது "Complaint that the actor encroached"
- அப்பகுதியில் பிரபல நடிகர் ஒருவர் வீட்டிற்கு அருகில் உள்ள சாலையை தனியார் ரியல் எஸ்டேட் அதிகாரிகளுடன் இணைந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
- இந்த சாலையை யாரும் பயன்படுத்தக் கூடாது என அறிவிப்பு பலகையும் வைத்துள்ளார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வில்பட்டியில் இருந்து பாரதி அண்ணாநகர் கிராமத்திற்கு செல்ல 6 கி.மீ. சாலை உள்ளது. இப்பகுதியில் உள்ள வெங்கலவயல், பேத்துப்பாறை, ஓராவி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் பிரபல நடிகர் ஒருவர் வீடு வாங்கியுள்ளார். வீட்டிற்கு அருகில் உள்ள சாலையை தனியார் ரியல் எஸ்டேட் அதிகாரிகளுடன் இணைந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். மேலும் இந்த சாலையை யாரும் பயன்படுத்தக் கூடாது என அறிவிப்பு பலகையும் வைத்துள்ளார். இதனால் பல ஆண்டுகளாக இந்த சாலையை பயன்படுத்தி வந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட வனத்துறை, கலெக்டர் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியோருக்கு விவசாயிகள் புகார் மனு அனுப்பியுள்ளனர். வருவாய்த்துறையினர் முறையாக ஆய்வு செய்து பாதை ஒதுக்கி தரவேண்டும். இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நடிகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






