என் மலர்
நீங்கள் தேடியது "Collection of Customs Fees"
- குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
- தரமான விதைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பூங்கொடி, மகளிர் திட்ட அலுவலர் செந்தில்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது, வேலூர் மாவட்டத்தில் உள்ள தினசரி, வார சந்தைகளில விவசாயிகள் கொண்டு செல்லும் விலைப் பொருட்களுக்கு அதிக சுங்க வரி வசூலிக்கின்றனர்.
தினசரி, வார சந்தைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தம் அடுத்த கல்லூர் பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுது ஏற்படுகிறது அதனை மாற்றி தர வேண்டுமென கூறினால் டிரான்ஸ்பார்மர் இருப்பு இல்லை என தெரிவிக்கின்றனர்.
மாதக்கணக்கில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சாவதால் பயிர்கள் கருகி சேதம் அடைகிறது. வே டிரான்ஸ்பார்மர் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சீவூரில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டிடம் சேதம் அடைந்து உள்ளது. அதனை சீரமைத்து தர வேண்டும். கோவிந்த ரெட்டிபாளையம் செல்லூர் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அந்த இடத்தை அளந்து கொடுக்க அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகின்றனர்.
விரைவில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடத்தை அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊசூர் ஆரம்பப்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு உள்ளது. இதுவரை பள்ளி கட்டிடம் கட்டப்படவில்லை. மலைப்பகுதிகளுக்கு மினி பஸ்களை இயக்க வேண்டும்.
ஒடுகத்தூர் வனப்பகுதியில் இருந்து வரும் காட்டெருமைகள் விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது காட்டெருமைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
குடியாத்தம் தட்டப்பாறையில் உள்ள உழவர் சந்தை சுற்றுச்சூழல் அருகே குப்பைகளை கொட்டி வருகின்றனர் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் 46 விவசாயிகள் கடனில் டிராக்டர் வாங்கினார் அதை திருப்பி செலுத்தாததால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அவர்கள் வாங்கிய டிராக்டர் கடனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாததால் 100 நாள் வேலைவாய்ப்பு பணியாளர்களை 5 நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்ற நாட்களில் விவசாயப் பணிகளுக்கு அனுமதிக்க வேண்டும்.
தோட்டக்கலைத் துறை சார்பில் கத்திரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட தரமான விதைகளை வழங்க வேண்டும்.
திருமணி பாலாற்றில் ஏற்கனவே இருந்த தரைப்பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
புதியதாக தரைப்பாலும் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.






