search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore Elephant attack"

    கோவையில் காட்டு யானை தாக்கி ஆதிவாசி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் கோவை- கணுவாய் செல்லும் சாலை இடையே 14 கி.மீட்டர் தூரமுள்ளது சேம்புக்கரை மற்றும் தூமனூர் ஆதிவாசி கிராமம்.

    வனப்பகுதியில் உள்ள இந்த மக்கள் விவசாயம் மற்றும் ஆடு, மாடுகள் மேய்ப்பதை முக்கிய தொழிலாக செய்து வருகிறார்கள். காட்டு விலங்குகள் வசிக்கும் பகுதியில் குடியிருக்கும் இவர்களை பெரும்பாரும் வனவிலங்குகள் தாக்கு வதில்லை. விவசாய நிலத்தில் யானைகள் பயிர்களை தின்றால் அவைகளை விரட்டாமல் பூஜை செய்வார்கள். தின்பது அதிர்ஷ்டம் என்றும், அவ்வாறு தின்றால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை.

    இந்நிலையில் இன்று அதிகாலை அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 42) என்ற ஆதிவாசி வாலிபர் நடந்து சென்றார். அப்போது இருட்டில் இருந்த யானை முருகேசனை துதிக்கையால் சுழற்றி வீசி மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே முருகேசன் ரத்தவெள்ளத்தில் பலியானார். பஸ் வசதி, செல்போன் சிக்னல் இல்லாததால் இந்த சம்பவம் குறித்து உடனடியாக தெரியவில்லை. நீண்ட நேரத்திற்கு பின்னர் கோவை வனத்துறைக்கு மற்றும் தடாகம் போலீசாருக்கு தெரியவந்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×