search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Co-operative sector"

    • கர்நாடகா அரசு மேக தாதுவில் அணை கட்டுவது சம்பந்தமாக காவிரி ஆணைய கூட்டத்தில் விவாதிப்பதை மத்திய அரசு அனுமதிக்க கூடாது
    • நுகர்பொருள் வாணிப கழக நெல் கொள்முதல் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்

    திருச்சி :

    தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநிலத் தலைவர் பூரா.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், லால்குடி ஒன்றிய தலைவர் ராமலிங்கம், ஒன்றிய நிர்வாகிகள் மதியழகன், சதாசிவம், விஜயகாந்த், துரைராஜ், நடராஜன் மற்றும் தொழிலாளர் விவசாயிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-

    கர்நாடகா அரசு மேக தாதுவில் அணை கட்டுவது சம்பந்தமாக காவிரி ஆணைய கூட்டத்தில் விவாதிப்பதை மத்திய அரசு அனுமதிக்க கூடாதுஎன்றும், மாநில அரசு மின்சார கட்டணத்தை உயர்த்த கூடாது என்றும்,

    மாதா மாதம் மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், நெல் குவிண்டாலுக்கு ரூ. 2500 வழங்க வலியுறுத்தியும் வருகிற 17ம் தேதி சென்னையில் நமது சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    செப்டம்பர் 1ம் தேதி கு றுவை சாகுபடி நெல்லை கொள்முதல் செய்வோம் என தமிழக முதலமைச்சர் அறிவிப்பு படி கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

    நுகர்பொருள் வாணிப கழக நெல் கொள்முதல் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.இலவச மின் இணைப்பில் மீட்டர் பொருத்துவதை கைவிட வேண்டும்.

    வடகிழக்கு பருவமழை தண்ணீரை ஏரிகளிலும் குளங்களிலும் சேமித்து வைக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும். சின்ன வெங்கா–யத்தை அரசு கொள்முதல் செய்து கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கிகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×