என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleanliness campaign awareness rally"

    • மக்காத குப்பையை தரம் பிரித்து கொடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • ஊழியர்கள்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம் :

    சாமளாபுரம் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் சாமளாபுரம் பேரூராட்சி உட்பட்ட பூங்காநகர் மற்றும் வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் வளாகத்தில் தூய்மைப்பணி நடைபெற்றது. பின்னர் பொதுமக்கள் சாமளாபுரம் பேரூராட்சி- தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து கொடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விழாயகாபழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்றதுணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தகுமார், அய்யன் கோவில் கண்காணிப்பாளர் தனசேகரன்,13-வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி, 4-வது வார்டு கவுன்சிலர் மைதிலி பிரபு மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற பணியாளர்கள், ஊழியர்கள் கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×