என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Citizens who drink alcohol"

    • பெண்கள், குடியிருப்பு வாசிகள் அச்சம்
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள பூங்காக்கள் மற்றும் தெரு ஓரங்களில் குடிமகன்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சத்துவாச்சாரி பகுதிகளில் குடிமகன்கள் ஆக்கிரமிப்பு இல்லாத பூங்காக்களே இல்ல என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இதைவிட தெருக்களில் உள்ள மரங்களின் அடிவாரத்தில் பகல் நேரத்தில் கூட அமர்ந்தவாறு குடிக்கின்றனர்.

    இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள் அச்சமடை கின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போடப்பட்டுள்ள நடைபா தைகளிலுயும் அமர்ந்து மது குடிக்கின்றனர்.

    குடிமகன்களுக்கு பயந்து குடியிருப்பு வாசிகளும் அவர்களை எச்சரிக்கை செய்ய பயப்படுகின்றனர்.

    இதே நிலை வேலூர் காட்பாடியில் உள்ள அனைத்து இடங்களிலும் நீடிப்பதாக கூறுகின்றனர். போலீசார் முறையான ரோந்து பணியில் ஈடுபட்டால் மட்டுமே அசம்பாவிதங்களை தடுக்க முடியும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×