என் மலர்
நீங்கள் தேடியது "Choosing a place to set up an office"
- உதவி கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு
- வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது
குடியாத்தம்:
குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகம் குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்தது கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அங்கிருந்த சார் பதிவாளர் அலுவலக கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்காலிகமாக சார்பதி வாளர் அலுவலகம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
குடியாத்தத்திற்கு சார்பதிவாளர் அலுவலகம் அனைத்து வசதிகளுடன் கூடிய இடத்தில் அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து குடியாத்தம் எம்.எல்.ஏ. அமுலு விஜயன் சட்டமன்றத்திலும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க குடியாத்தம் செதுக்கரை விநாயகபுரம் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள நகராட்சி பயணியர் விடுதி அமைந்துள்ள பகுதியில் சார் பதிவாளர் அமைப்பதற்கான இடத்தை குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன், அமலுவிஜயன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது குடியாத்தம் தாசில்தார் எஸ்.விஜயகுமார் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர்ரவி, நகர் மன்ற உறுப்பினர் என்.கோவிந்தராஜ் உள்பட வருவாய்த்துறையினர் பலர் உடன் இருந்தனர்.






