search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chinese Recipes"

    • ஜப்பான் சிக்கன் இணையம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.
    • பல உணவகங்கள் தங்கள் மெனுவில் சேர்க்கத் தொடங்கி உள்ளன.

    ஜப்பான் சிக்கன் இணையம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இது அம்மன் மெஸ் எனப்படும் ஈரோடு உணவகத்தில் பிரபலமான உணவு. இந்த உணவு இணையத்தில் மிகவும் புகழ் பெற்று வருகிறது தமிழகம் முழுவதும் உள்ள பல உணவகங்கள் இதை தங்கள் மெனுவில் சேர்க்கத் தொடங்கி உள்ளன. இந்த வித்தியாசமான மற்றும் சுவையான ஜப்பான் சிக்கன் வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போம்...

    தேவையான பொருட்கள்:

    சிக்கன்- அரை கிலோ

    மைதா- 3 ஸ்பூன்

    சோள மாவு- 2 ஸ்பூன்

    மிளகு-1 டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    வெண்ணெய்- 3 டீஸ்பூன்

    பூண்டு- 3 பல்

    பச்சை மிளகாய்- 2

    பால்- 1/2 லிட்டர்

    முந்திரி- 10

    சர்க்கரை-1 டீஸ்பூன்

    கொத்தமல்லி இலை- சிறிதளவு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள சிக்கன், மைதா, சோள மாவு, உப்பு, மிளகுதூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கலந்துவைத்துள்ள சிக்கனை பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    முந்திரியை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்து மற்றொரு கடாயில் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பின்பு அதில் காய்ச்சி ஆறவைத்த பால் மற்றும் பொத்த முந்திரியை சேர்த்து கிளற வேண்டும்.

    இதனைத்தொடர்ந்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை, மிளகுத்தூள் சேர்த்து கிளறி கடைசியாக பொரித்த சிக்கனை சேர்க்க வேண்டும்.

    இறுதியாக கிரேவி பதத்திற்கு வந்ததும் அதில் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான ஜப்பான் சிக்கன் தயார்.

    • மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று மோமோஸ்.
    • மோமோஸ் நம்மில் பலருக்கு மிகவும் பிடித்த உணவு.

    வட இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று மோமோஸ். தற்போது இது தென் இந்தியாவிலும் பிரபலமாகி உள்ளது. இது சைவம், அசைவம், வேகவைத்த அல்லது வறுத்தது என பல வகைகளில் கிடைக்கிறது. மோமோஸ் நம்மில் பலருக்கு மிகவும் பிடித்த உணவாக இருக்கும். எப்போது வெளியில் சென்றாலும், பானிப்பூரி மற்றும் மோமோஸ் சாப்பிடாமல் வீடு திரும்புவதே இல்லை.

    சிறியவர் முதல் பெரியவர் அவரை அனைவருக்கும் பிடித்த மோமோஸ் ஐ வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மாவு தயார் செய்ய

    மைதா – 1 கப்

    உப்பு – 1/2 டீஸ்பூன்

    எண்ணெய் – 2 டீஸ்பூன்

    ஸ்டப்பிங் செய்ய

    சிக்கன் கீமா – 300 கிராம்

    வால்நட் – 1/4 கப்

    பச்சை மிளகாய் – 2 சிறிதளவு

    பூண்டு – 3 பற்கள்

    இஞ்சி – 1 துண்டு நறுக்கியது

    வெங்காயத்தாள், வெங்காயம் – 1/2 கப் நறுக்கியது

    வெங்காயத்தாள் கீரை – 1/4 கப்

    உப்பு – 1/2 ஸ்பூன்

    மிளகு தூள் – 1/2 ஸ்பூன்

    சோயா சாஸ் – 2 ஸ்பூன்

    செய்முறை

    முதலில், மைதா மாவில் உப்பு சேர்த்து கலந்து பின்னர் தண்ணீர் ஊற்றி பரோட்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்னர், அதில் எண்ணெய் ஊற்றி 5 நிமிடம் நன்கு பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும். இப்போது, வாணலியில் வால்நட் சேர்த்து வறுத்து ஆறவிட்டு மிக்சியில் அரைத்து தனியே வைக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில், நறுக்கிய வால்நட், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, சிக்கன் கீமாவில் உப்பு, மிளகு, சோயா சாஸ், வால்நட் கலவையை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    தயார் செய்து வைத்த மோமோஸ் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தில் போல மெல்லிசாக தேய்த்து கொள்ளவும். மாவின் நடுவில் சிக்கன் சேர்மத்தை வைத்து மாவின் முனைகளை மடிக்கவும். அடுத்து, மூங்கில் ஸ்டிமரில் முட்டைகோஸ் இலையை வைத்து அதன் மேல் தயார் செய்த மோமோசை வைத்து மூடி 15 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் சுவையான சிக்கன் மோமோஸ் தயார். ஸ்டீமர் இல்லையெனில், இட்லி சட்டியில் வைத்து வேக வைக்கலாம்.

    ×