என் மலர்
நீங்கள் தேடியது "Cheyyar gambling arrest"
செய்யாறு:
செய்யாறில் பழைய காஞ்சீபுரம் ரோட்டில் உள்ள ராஜாஜி பூங்காவில் 5 பேர் கும்பல் காட்டன் சூதாட்டம் நடத்தினர். பொதுமக்களை தொந்தரவு செய்து காட்டன் சூதாட்டம் மூலம் மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.
இதுப்பற்றி, செய்யாறு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார், பூங்காவிற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் காட்டன் சூதாட்ட கும்பல் தப்பி ஓட முயன்றது. 4 பேரை போலீசார் விரட்டி பிடித்தனர்.
ஒருவர் தப்பி ஓடி விட்டார். விசாரணையில் அவர்கள், செய்யாறு கொடநகரை சேர்ந்த அப்புனு என்கிற சந்திரபாபு (வயது 33), நேரு நகரை சேர்ந்த காசீம் (48), ஆரணி கூட்ரோடு பகுதியை சேர்ந்த முருகன் (38), சமாதியான் குளத்தெருவை சேர்ந்த தேவேந்திரன் (48) ஆகியோர் என்பது தெரியவந்தது.
4 பேரையும் கைது செய்த போலீசார், தப்பி ஓடிய ஒத்தவாடை பிராமணர் தெருவை சேர்ந்த லோகநாதனை (50) வலைவீசி தேடி வருகின்றனர்.






