search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Scuba Divers"

    • சென்னை நீலாங்கரையில் ஆறு ஸ்கூபா டைவர்ஸ் ஆழ் கடலில் இறங்கினர்.
    • அறுபது அடி ஆழ நீருக்கு அடியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செயல்படுத்தினர்.

    நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. பொதுத் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், சென்னை ஸ்கூபா டைவர்ஸ் நீருக்கடியில் தனித்துவமா முறையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

    வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை நீலாங்கரையில் ஆறு ஸ்கூபா டைவர்ஸ் ஆழ் கடலில் இறங்கி வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை தெரிவிக்கும் வகையில், அறுபது அடி ஆழ நீருக்கு அடியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செயல்படுத்தினர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) வாக்குப்பதிவு விழிப்புணர்வு பதாகைகளுடன் போலி மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை ஏந்தி கடலில் மூழ்கினர்.

    "எனது வாக்கின் வலிமை எனக்குத் தெரியும்" மற்றும் "எனது நாடு, என் வாக்கு" என்று பலகையில் எழுதப்பட்டிருந்தது.

    ஓட்டு போடுவது நமது கடமையும் உரிமையும் என்பதை உணர்த்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக டைவர்ஸ் ஒருவர் தெரிவித்தார்.

    ஆழமான டைவிங் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஸ்கூபா டைவ் பயிற்றுவிப்பாளரும் டெம்பிள் அட்வென்ச்சர் இயக்குநருமான எஸ்.பி அரவிந்த் தருண்ஸ்ரீ ஏற்பாடு செய்தார்.

    ×