என் மலர்
நீங்கள் தேடியது "Checking authority"
- கலெக்டர் உத்தரவு
- தொடர்ந்து பதவியில் நீடித்தாலும் கணக்கு வழக்குகளில் தலையிட முடியாது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இலவம்பாடி ஊராட்சி தலைவ ராக இருப்பவர் ஜானகிராமன்.
இலவம்பாடி ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில் திட்டப் பணிகளை மேற்கொள்ள அரசு ஒதுக்கும் நிதியை ஜானகிராமன் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு தொடர்ந்து புகார் மனு அனுப்பி உள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி நடந்த விசாரணையில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் காசோலையில் கையெழு த்திடவும் மற்றும் மின்னணு பண பரிவர்த்தனை செய்யும் உரிமத்தை ரத்து செய்தும் உத்தரவிட்டார். மேலும் அவர் தொடர்ந்து பதவியில் நீடித்தாலும் கணக்கு வழக்குகளில் தலையிட முடியாது என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி ஊராட்சியில் வழங்கினார். மேலும் காசோலை பண பரிவர்த்தனை செய்யும் உரிமை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (ஊராட்சி நிர்வாகம்) வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.






