search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cheating on a woman"

    • செல்போன் டவர் அமைப்பதாக கூறி துணிகரம்
    • சைபர்கிரைம் போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை சேர்ந்த பெண் ஒருவரின் செல்போன் எண்ணிற்குதனி யார் செல்போன் டவர் வைப்பதற்கு இடம் தேவை என்றும், இடம் உள்ளவர்கள் இதில் குறிப்பிட்டு உள்ள செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று குறுஞ்செய்தி வந்து உள்ளது.

    இதைய டுத்து அவர் அந்தகுறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணிற்கு பேசியுள்ளார். அப்போது அவரிடம் தனியார் செல்போன் டவர் அமைப்பது குறித்து மூளை சலவை செய்யும் அளவிற்கு சிலர் பேசியுள்ளனர்.

    இறுதியாக பேசிய நபர் உங்களது இடத்தில் செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்றால் முதலில் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    ஆரம்பத்தில் அதனை தவிர்த்த அந்த பெண், பின்னர் குறுஞ்செய்தி வந்தசெல்போன் எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பகுதி பகுதியாக ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 500 வரை அனுப்பினார்.

    அதன்பின்னர். யாரும் தொடர்பு கொள்ளாததால் சந்தேகம் அடைந்த அவர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அந்த செல்போன் எண் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    அவர் தன்னிடம் பணம் மோசடி செய்யப்பட்டு உள் ளது குறித்து திருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    அதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருவண்ண ணாமலை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×