என் மலர்
நீங்கள் தேடியது "cheated a girl and married"
- சம்பவத்தன்று நத்தம் வந்த வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டார்.
- வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நத்தம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(18). இவர் நத்தம் அசோக்நகரை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அவர்கள் செல்போனில் பேசி வந்துள்ளனர். சம்பவத்தன்று நத்தம் வந்த முருகானந்தம் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் முருகானந்தம் கடத்தியது தெரியவரவே அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.






