search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheakpost"

    • அமைச்சரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைகிறது
    • குற்றவாளிகள் தப்பவும், நுழையவும் முடியாது

    திருச்சி,

    திருச்சி மாநகரை சுற்றி உள்ள சாலைகளில் மாநகர காவல்துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் திண்டுக்கல் சாலையில் கருமண்டபம், மதுரை சாலையில் பஞ்சப்பூர், புதுக்கோட்டை சாலையில் செம்பட்டு, தஞ்சாவூர் சாலையில் காட்டூர் ஆயில் மில், சென்னை சாலையில் ஒய் ேராடு சந்திப்பு, திருவானைக்காவல் கொள்ளிடம், கரூர் சாலையில் குடமுருட்டி, வயலூர் சாலையில் ரெங்காநாகர், குழுமணி சாலையில் லிங்க நகர் என 9 செக்போஸ்ட்டுகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியின் வளர்ச்சியின் காரணமாக மாநகரத்தின் பரப்பளவும் மெல்ல அதிகரிப்பதோடு, குடியிருப்புகளும் பெருகி வருவதால், புதிய இணைப்பு சாலைகள் அமையப்பபெற்று உள்ளது. இதன் காரணமாக மேலும் சில செக் போஸ்ட்களை அமைக்க மாநகர காவல்துறை ஆணையர் சத்தியபிரியா முயற்சி மேற்கொண்டுள்ளார். இது குறித்த கள ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவின்படி திருச்சி மாநகரை சுற்றி மேலும் 7 சோதனைச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கே.கே.நகரில் இருந்து செல்லும் ஓலையூர் சாலையில் உடையான்பட்டி மேட்டு வாய்க்கால், எல்.ஐ.சி. காலனியில் இருந்து சாத்தனூர் செல்லும் சாலையில் கவிபாரதி நகர் பிரிவு சாலை, கலெக்டர் அலுவலகம் பின்புறம் உய்யகொண்டான் கால்வாய் ஒட்டி செல்லும் சாலையில் தொட்டிப்பாலம், மேலகல்கண்டார் கோட்டையில் காவிரி நகர், உள் அரியமங்கலத்தில் குவளக்குடி வாய்க்கால் பாலம், கல்லணை செல்லும் சாலைகளில் திருவளர்ச்சோலை மற்றும் சர்க்கார்பாளையம் சாலைகளில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் இடங்கள் என மேலும் 7 செக்போஸ்ட்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த 7 செக்போஸ்ட்டுகள் கட்டுவதற்கு அமைச்சர் கே.என்.நேருவின், தொகுதி மேம்பாட்டு நிதி கோரப்பட்டு உள்ளது.மேலும் தற்போது திண்டுக்கல் சாலை கருமண்டபத்தில் உள்ள செக்போஸ்ட் தீரன் நகர் பகுதிக்கும், குழுமணி சாலையில் உள்ள செக்போஸ்ட் அரவனூர் பகுதிக்கும், வயலூர் சாலையில் உள்ள செக்போஸ்ட் ரெட்டை வாய்க்கால் பகுதிக்கும் மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.புதிதாக 7 செக்போஸ்ட்கள் அமையப்பெற்றால், திருச்சி மாநகருக்குள் வரும் அனைத்து வழிகளிலும் மொத்தம் 16 சோதனைச்சாவடிகள் அமையப்பெறும். இதனால் மாநகருக்குள் குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் மாநகரை விட்டு எங்கும் தப்பிக்கவும் முடியாது, மாநகருக்குள் நுழையவும் முடியாது என்கின்றனர் மாநகர காவல் துறை அதிகாரிகள்.

    ×