search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandhira Kraganam"

    • சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
    • இப்படிப்பட்ட கிரகணம் உல கில் உள்ள சில நாடுகளில் தெரியும் மற்ற நாடுகளில் தெரியாது.

    சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

    இப்படிப்பட்ட கிரகணம் உல கில் உள்ள சில நாடுகளில் தெரியும் மற்ற நாடுகளில் தெரியாது.

    சந்திர கிரக ணம் துவங்கப் போகும் எட்டு மணி நேரத்திற்கு முன்பாகவே உணவு உண்ண வேண்டும்.

    சந்திரன் ஔஷதிகளுக்கு அதிபதியானதால் கிரகண சமயத்தில் நமது வயிற்றில் உணவு இருக்கக் கூடாது.

    அப்படி இருந்தால் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    சந்திர கிரகணம் விட ஆரம்பித்தவுடன் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்குப் பிரம்யஞ்ஜம் கிடையாது.

    கிரகணம் பிடிக்கும் போதும், விட்ட பிறகும் குளிக்க வேண்டும். கிரகண காலத்தில் எல்லா நீர்நிலைகளும் கங்கைக்குச் சமம்.

    இந்தக் காலத்தில் நாம் உடுத்தியிருந்த வஸ்திரங்களை நனைத்து மடியாக வேறு உடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும்.

    முடிந்தவரை எல்லா உணவு பண்டங்களிலும், குடிக்கும் நீரிலும் தர்ப்பை ஒன்றைப் போட்டு வைக்கலாம்.

    சந்திர கிரகணக் காலத்திலேயே சந்திரன் அஸ்தமன மானால் அதை 'கிரஸ்தாஸ் தமனம்' என்பார்கள்.

    அன்று பகல் முழுவதும் விரதமிருந்து மாலை சந்தி ரோதயம் ஆன பிறகு நிலவைப் பார்த்து விட்டு சாப்பிட வேண்டும்.

    கிரகணம் ஆரம்பித்து முடியும் வரை ஜபம் செய்யலாம், இறைவன் நாமாவைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

    இப்படிச் செய்தால் நாம் மிகுந்த பலனை அடையலாம். ஆனால் இந்தச் சமயத்தில் தூங்கக் கூடாது.

    கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது.

    கிரகண காலத்தில் என்ன நட்சத்திரம் உள்ளதோ அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஓர் ஓலையில் கிரகண மந்திரங்களை எழுதி கிரகணம் ஆரம்பிக்கும் சமயத்தில் நெற்றியில் பட்டம் கட்டிக் கொள்ள வேண்டும்.

    விட்டவுடன் குளித்து விட்டு சுலோகம் எழுதியிருந்த ஓலையோடு மட்டைத் தேங்காய் வெற்றிலைப் பாக்கு இவற்றோடு தட்சணையும் வைத்துத் தானம் செய்ய வேண்டும்.

    கிரகணத்தன்று சிரார்த்தம் (தெவசம்) வந்தால் செய்யக் கூடாது.

    அதை மறுநாள் செய்யலாம் அல்லது அடுத்த மாதம் அதே திதியில் செய்யலாம்.

    ×