search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chalk piece impact"

    தருமபுரியில் பெய்துவரும் தொடர் மழையால் சாக்பீஸ் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. #Rain

    தருமபுரி:

    தமிழத்தில் 2018-19-ம் கல்வி ஆண்டின் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது.

    இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் மாதம் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தருமபுரி மாவட்டத்தில் ஏமக்குட்டியூர், மாரண்ட அள்ளி, பாலக்கோடு பகுதிகளில் சாக்பீஸ் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    சாக்பீஸ், ‘ஜிப்சம் பவுடரை தண்ணீரில் கரைத்து அச்சுகளில் வார்த்து, நாளொன்றுக்கு ஏறத்தாழ ஒரு டன் சாக்பீஸ்கள் தயாரிக்கப்படுகிறது. ஒரு முறை அச்சில் ஊற்றப்படுவதில் 1,110 சாக்பீஸ்கள் தயாரிக்கப்படுகிறது.

    இங்கு வெள்ளை சாக்பீஸ்களுடன், பச்சை, வெளிர் பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு, ஆரஞ்சி ஆகிய வண்ணங்களில் சாக்பீஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. பிறகு சிறிய பெட்டிக்குள் 100, 120, 140 பீஸ்களாக அடுக்கி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதன் விலை ரூ.13 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது. வண்ண சாக்பீஸ் சற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கு தயாரிக்கப்படும் சாக்பீஸ்கள் தமிழ்நாட்டில் தருமபுரி, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களுக்கும், கர்நாடகத்துக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

    தற்போது சாக்பீஸ் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் கடந்த 5 நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் தினமும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், உற்பத்தி செய்யப்பட்ட சாக்பீஸ்களை உலர வைக்க முடியாமல் தார்பாய் போட்டு பாதுகாத்து வைத்துள்ளனர்.

    மேலும், தினமும் மழை வருவதால் உற்பத்தி செய்ய முடியவில்லை என சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். #Rain

    ×