என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ceremony to provide welfare assistance"

    கிருஷ்ணகிரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் பங்கேற்று, 78 உற்பத்தியாளர் மற்றும் தொழில் குழுக்களுக்கு ரூ.62 லட்சத்து 77 ஆயிரத்து 800க்கான மானியம் மற்றும் பயிற்சி தொகையும், 60 நபர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ் மற்றும் 10 நபர்களுக்கு தீவன விதை மற்றும் 50 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி வாழ்த்தி பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ்,
    ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன், மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு, முன்னாள் எம்எல்ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், முன்னாள் எம்பி. வெற்றிச்செல்வன், நாகோஜனஅள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, தாசில்தார் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், செயல் அலுவலர்கள் பிரதீப்குமார், ஜெய்குமார், சிவலிங்கம், முத்துகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
    ×