search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Govt Information"

    • முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை புதுப்பிக்க வேண்டும்
    • என்.எஸ்.பி. தளத்தில் சரிபார்க்கப்பட வேண்டும்.

    ேசலம்:

    தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் (என்.எம்.எம்.எஸ்.) தேர்ச்சி பெற்று நடப்பு கல்வி ஆண்டில் (2022-2023) 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதிதாக விண்ணப்பிக்கும்படியும், மேலும் இதே தேர்வில் தேர்ச்சிப் பெற்று 10, 11, 12-ம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கான போதுமான அவகாசம் வழங்கப்பட்டது.

    என்.எம்.எம்.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை புதிதாகவோ, புதுப்பிக்கவோ என்.எஸ்.பி. தளத்தில் மட்டுமே பதிய வேண்டும். அதேபோல் 2018-2019, 2019-2020, 2020-2021 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் விபரங்களையும் மேற்கொண்ட இணையதளத்தில் புதுப்பிக்க வேண்டும்.

    மேலும் கடந்த கல்வி ஆண்டில் (2021-2022) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களையும் அேத தளத்தில் பதிய வேண்டும். இதை தொடர்ந்து புதிய, புதுப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் என்.எஸ்.பி. தளத்தில் சரிபார்க்கப்பட வேண்டும்.

    இவை அனைத்தையும் சரிவர முடிக்கப்பட்டால் மட்டுமே தகுதியுடைய மாணவர்களுக்கு என்.எம்.எம்.எஸ். உதவித்தொகை கிடைக்கும். இந்த வாய்ப்பை தவறவிட்டு விட்டால், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து உதவித் தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என மத்திய அரசு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×