search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CELL PHONES ARE STOLEN"

    • முத்துவளநாடு கைகாட்டி பகுதியில் செல்போன் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார்.
    • கடைக்குள் இருந்த நவீன ஆண்டிராய்டு செல்போன்கள் மற்றும் செல்போனுக்கான இதர உதிரி பாகங்கள் என மொத்தம் ரூ.97 ஆயிரம் மதிப்பிலான பொருட்களையும் ரூ. 10,000 ரொக்க பணத்தையும் மர்ம ஆசாமிகள் அள்ளிச் சென்றது தெரியவந்தது.

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வளநாடு கைகாட்டி மின்வாரிய அலுவலகம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (வயது 30). இவர் வளநாடு கைகாட்டி பகுதியில் செல்போன் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல் முத்து நேற்று மாலையில் செல்போன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக அவருக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். உடனே அவர் பதறியடித்துக் கொண்டு கடைக்கு வந்தார்.

    இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடைக்குள் இருந்த நவீன ஆண்டிராய்டு செல்போன்கள் மற்றும் செல்போனுக்கான இதர உதிரி பாகங்கள் என மொத்தம் ரூ.97 ஆயிரம் மதிப்பிலான பொருட்களையும் ரூ. 10,000 ரொக்க பணத்தையும் மர்ம ஆசாமிகள் அள்ளிச் சென்றது தெரியவந்தது. மேலும் செல்போன் கடைக்கு அருகாமையில் உள்ள மளிகை கடையின் பூட்டையும் உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர்.

    அங்கிருந்த 2 மூட்டை அரிசி, 70 நோட்டு புத்தகம், 20 ஆயில் கேன்கள் உள்ளிட்ட ரூ.3,000 மதிப்பிலான மளிகை பொருட்கள், மற்றும் ரூ.15,000 ரொக்கப் பணம் ஆகியவற்றையும் அந்த நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து முத்து மற்றும் மீனாட்சி அம்மாள் ஆகிய இருவரும் வளநாடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த கடைகளில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ×