search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ceaning Staff"

    • தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை செலவாகும்.
    • 37 வயதுடைய ஆண் நபருக்கு அவரின் 57 வயது தாய் ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார்

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு ,தொண்டை அறுவை சிகிச்சை பிரிவில் பிறவியிலேயே வாய் பேச முடியாத, காது கேட்காத 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தை களுக்கு காது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. காது கேளாத குழந்தைகளால் பேசவும் இயலாது.

    இந்த குழந்தைகளை ஆரம்ப கட்டத்திலே கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை அளிப்பது அவசியம். இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாகும். இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை செலவாகும்.

    ஆனால் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். அவர்கள் நலமுடன் உள்ளனர்.

    அறுவை சிகிச்சை செய்த பிறகு குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சி என்பது முக்கியமாகும். அதனை முறைப்படி செய்யும் போது மட்டுமே குழந்தைகளால் பேச இயலும். எனவே பொதுமக்கள் இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளுக்கு பேச்சு மற்றும் செவித்திறன் பெற்று பயன்பெற வேண்டும்.

    தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைதஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியா ளர்கள் அனைவருக்கும் தூய்மை பணியாளர் நல வாரியம் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 95 சதவீதம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. இந்த நல வாரிய அடையாள அட்டை மூலம் தூய்மை பணியாளர்கள் வாழ்வாதாரம் உயரும். அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி கிடைக்கும். இது போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும்.

    இன்று தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த 37 வயதுடைய ஆண் நபருக்கு அவரின் 57 வயது தாய் ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார். இன்று அந்த வாலிபருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×