என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CATTLE SHOULD NOT BE BOUND AND SENT FOR GRAZING"

    • கால்நடைகளின் கால்களை கட்டி மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • கால்நடை போக்குவரத்து விதியின் படி குறைந்த பட்சம் 2 சதுரமீட்டர் இடவசதி

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது பசுக்கள், எருமைகள், மற்றும் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பும் போது கால்நடைகளின் முன்னங்காலை கழுத்துடன் கயிற்றால் கட்டி அனுப்பி விடுகின்றனர். இதனால் அந்த கால்நடைகள் மிகவும் துன்பத்துக்கு உள்ளாகின்றன.

    மேலும் சாலைகளை கடக்கும் போது வேகமாக செல்ல முடியாமலும் திரும்ப முடியாமலும் பல விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே கால்நடைகளின் கால்களை கட்டி மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது. கால்நடைகளை தெருக்களில் திரிய அனுமதிக்கும் கால்நடையின் உரிமையாளருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்க பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி செல்லும் போது கால்நடை போக்குவரத்து விதியின் படி குறைந்த பட்சம் 2 சதுரமீட்டர் இடவசதி மற்றும் குடிநீர் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×