search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cataracts Test"

    • ஸ்டிராய்டு சொட்டு மருந்து பயோகிப்பவர்களுக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது.
    • இந்த நோயை அமைதி பார்வைத் திருடன் எனக்கூறுவார்கள்.

    கண் நீர் அழுத்த நோய் வருவதற்கு பரம்பரையும் ஒரு காரணமாகும். கண்நீர் அழுத்த நோய் உள்ள குடும்பத்தினருக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், கண்ணில் அடிபடுதல், கண் புரை முற்றி வெடித்த நிலையில் உள்ளவர்களுக்கும், கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கும், ஸ்டிராய்டு சொட்டு மருந்து தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கும் இந்த நோய் பாதிப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது.

    கண் நீர் அழுத்த நோய் பல வகைப்படும். இவற்றில் முக்கியமானவை கண் திறந்த கோண கண் நீர் அழுத்த நோய், குறுகிய கோண கண் நீர் அழுத்த நோய், பிறவியில் அமைந்த கண் நீர் அழுத்த நோய், இரண்டாம் நிலை கண் நீர் அழுத்த நோய் ஆகும். இந்த நோய்க்கு பொதுவாக அறிகுறிகள் எதுவும் இருக்காது. அதனால் இதனை அமைதி பார்வைத் திருடன் எனக்கூறுவார்கள்.

     40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒரு முறை கண் பரி சோதனை செய்து கொண்டால், இந்நோயை சீக்கிரமாக கண்டுபிடித்து உரிய மருத்துவம் செய்து பார்வை இழப்பை தடுக்கலாம். குறுகிய கோண கண் நீர் அழுத்த நோயை சில சமயம் லேசர் சிகிச்சை மூலம் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் தடுக்கலாம்.

    கண் நீர் அழுத்த நோய்க்கு மருந்துகள், லேசர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை கண்ணின் தன்மைகேற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யப்படும்.

    ×