என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Caste Certificate Camp"

    • தாசில்தார் தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு நரிக்குறவர்கள் காலனியில் நேற்று பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு ஆரணி தாசில்தார் மஞ்சுளா தலைமை தாங்கினார். கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், கொங்கராம்பட்டு ஊராட்சி முன்னாள் தலைவர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு வரவேற்று பேசினார்.

    இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், பொற்கொடி, ஜேம்ஸ், ரமேஷ்குமார், துரைராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கொங்கராம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் நன்றி கூறினார்.

    ×