search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case against 7 people"

    • கிராம நிர்வாக அலுவலர் புகார்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த சுந்த ரம்பள்ளி ஊராட்சியில் நேற்று முன்தினம் எருது விடும் திருவிழா நடைபெற் றது. இதில் 400 காளைகள் பங்கேற்று ஓடியது. மதியம் 2 மணி வரை மட்டுமே எருது விடும் திருவிழா நடத்த அனு மதி அளிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி 2 மணி அளவில் எருது விடும் திருவிழாவை முடித்துக் கொள்ள போலீ சார் மற்றும் வருவாய்த்துறை யினர் கூறினார்கள். ஆனால் விழாக் குழுவினர் விதிகளை மீறி மாலை 4.45 மணி வரை விழா நடத்தினர்.

    பலமுறை விழா குழுவினரிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கூறியும் எருதுகளை விட்டுக் கொண்டே இருந்தனர்.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் நித்திய கல்யாணி கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் குறிப் பிட்ட நேரத்திற்குள் விழாவை முடிக்காமல், அதிகாரிகளை பணி செய்யாமல் தடுத்ததாக கூறியிருந்தார்.

    அதன்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கருணாநிதி, அழகேசன், ராஜ சேகர், மணி உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×