search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car Rent"

    குஜராத் மாநிலத்தில் திருமண நேரத்தில் கார் அனுப்பாததால் மணமகனுக்கு கார் நிறுவனம் ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள போர்சத் நகரை சேர்ந்தவர் குலாம் ரசூல் வோரா. தொழில் அதிபர்.

    இவர் தனது மகன் சோயப் திருமணம் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 20-ந்தேதி நடந்தது. இந்த நிலையில் திருமணத்துக்காக ஆனந்த் நகரில் உள்ள ஒரு பிரபல கார் நிறுவனத்தில் வாடகைக்கு அதி நவீன சொகுசு கார் முன்பதிவு செய்தார்.

    நாள் ஒன்றுக்கு ரூ.24 ஆயிரம் கட்டணம் என பேசி முடித்து ரூ.5 ஆயிரம் முன் பணம் செலுத்தினார். ஆனால் திருமணத்துக்கு அந்த நிறுனம் கார் அனுப்பவில்லை.

    வோராவும் அவரது மகன் சோயப்பும் வீட்டில் பல மணிநேரம் காத்திருந்தனர். ஆனால் கார் வரவில்லை. எனவே, ஆனந்த் நகரில் உள்ள வேறு ஒரு நிறுவனத்தின் காரை பதிவு செய்து திருமண மண்டபத்துக்கு சென்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வோரா சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்தின் மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஏற்கனவே முன்பதிவு செய்தும் திருமணத்துக்கு மணமகனை அழைத்துச் செல்ல கார் அனுப்பவில்லை. இதனால் உறவினர்கள் மத்தியில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது.

    ஆகவே, மன உளைச்சலை ஏற்படுத்திய கார் நிறுவனம் மணமகனுக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

    வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பு கார் முன்பதிவை வோரா ரத்து செய்து விட்டார். அதற்குரிய பணத்தையும் திரும்ப வாங்கி கொண்டார். எனவே கார் அனுப்பவில்லை என பதில் அளித்தது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நுகர்வோர் கோர்ட்டு கார் நிறுவனம் மணமகனுக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. முன் பதிவு ரத்து செய்ததற்கான ஆதாரத்தை கார் நிறுவனம் தாக்கல் செய்யவில்லை என தெரிவித்தது.
    ×