என் மலர்
நீங்கள் தேடியது "Cancellation of train services ரெயில் சேவை ரத்து"
- சேலம் - விருத்தாச்சலம் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- ரெயில் பாதையில் உள்ள ரெயில்வே லெவல் கிராசிங் பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப் படுகின்றன.
சேலம்:
சேலம் - விருத்தாச்சலம் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சின்ன சேலம், புக்கிரவாரி ரெயில் நிலையங்கள் இடையில் உள்ள ரெயில் பாதையில் உள்ள ரெயில்வே லெவல் கிராசிங் பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப் படுகின்றன.
இதனால் சேலம் - விருத்தாச்சலம் பயணிகள் ரெயில் சேவை இரு மார்க்கத்திலும் நாளை ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் நாளை காரைக்கால் - பெங்களூர் பயணிகள் ரெயில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்து அடைவதில் 1½ மணி நேரம் தாமதம் ஏற்படும் என சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






