என் மலர்
நீங்கள் தேடியது "BUSES ARE AVAILABLE FROM ARIYALUR TO MAJOR CITIES"
- அரியலூரில் இருந்து முக்கிய நகரங்களுக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரியலூர், செந்துறை வழியாக கோட்டைக்காடு கிராமத்திற்கு கூடுதலாக பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் அப்பகுதி மக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிப்பதாவது:
அரியலூர் மாவட்டத்தின் தலைநகரம், மிகப் பெரிய வியாபார ஸ்தலமாக உள்ளது, அரியலூர் தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, மாவட்ட கோர்ட், உட்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளது.
அரியலூர், கடலூர், மாவட்டத்துடன் இணைப்பது கோட்டைக்காடு என்ற கிராமம்தான். இந்த ஊர் குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ளது.
இந்த ஊருக்கு அரியலூரில் இருந்து ஒரு பேருந்து தான் இது நாள் வரை சென்று வருகின்றது. அந்த பேருந்து பழுதாகி விட்டால் வேறு பேருந்து வசதி இல்லாமல் 25 கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
அதனால் அரியலூர், செந்துறை வழியாக கோட்டைக்காடு கிராமத்திற்கு கூடுதலாக பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும்.
அரியலூரில் இருந்து பழனி, மதுரை, கோவை, திருப்பூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும், அரியலூர் - திருவையாறு வழியாக கும்பகோணத்திற்கு கூடுதல் பேருந்து வசதியை செய்து கொடுக்க வேண்டும்.
அரியலூரில் இருந்து திருமானூர், திருமழபாடி, செந்துறை, உடையார்பாளையம், டால்மியாபுரம் ஆகிய ஊர்களுக்கு நகரப் பேருந்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






