என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus - vehicle accident"

    • விபத்தில் சரக்கு வாகனத்தின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்து டிரைவர் படுகாயமடைந்தார்.
    • போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஒட்டன்சத்திரம்:

    தேனியில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ் வந்தது. வீரகுமார் என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சரக்கு வாகனத்தின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. மேலும் டிரைவர் சுரேஷ் படுகாயமடைந்தார். அவரை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக பஸ்சில் வந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×